காலிமுகத்திடலில் நேற்று(22) அதிகாலை ஏற்பட்ட பதற்ற நிலையின் போது செய்தி சேகரிக்க சென்ற தேசிய மற்றும் சர்வதேச ஊடகவியலார்களின் கடமைக்கு குந்தகம் ஏற்படுத்தப்பட்டதுடன் சர்வதேச ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஊடகவியலார்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரம் சார்பாக ஆழ்த்த கவலைகளை தெரிவித்துக் கொள்வதாகவும் முஸ்லீம் மீடியா போரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பில் நடுநிலையான விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் எந்தவொரு தடங்கலும் இல்லாமல் ஊடகவியலார்கள் தமது கடமைகளை சுதந்திரமாக செய்வதற்க்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரம் கேட்டுக்கொண்டுள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.