வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் சாரதி அனும‌தி பத்திரம் மற்றும் வாகன கைமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் மறுசீரமைப்பு செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி கோரியுள்ளது.


திணைக்களம் அதன் அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களைத் மறுசீரமைப்பதற்கு அமைச்சரின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்.

2009 ஆம் ஆண்டு இறுதித் திருத்தம் செய்யப்பட்டது. 13 வருடங்களின் பின்னர் இந்தக் கட்டணங்களுக்கான மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாக ஆணையாளர் வசந்த என். ஆரியரத்ன நேற்று தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் துறைகள் பல வழங்கும் சேவைகளுக்கான கட்டணங்களுடன் ஒப்பிடுகையில், எங்கள் சேவைகளுக்கான கட்டணம் மிகவும் குறைவு, புதிய சாரதி அனும‌தி பத்திரத்திற்கு ஆயிரத்து 700 மற்றும் புதுப்பிக்காததற்கு ஆண்டுக்கு ரூ.250 மட்டுமே அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் அரியரத்னா தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.