ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஏற்கனவே தடைசெய்யப்பட்டிருந்த இயக்கங்கள் பலவற்றின் மீதான தடையை நீக்கியமை தொடர்பில் எமக்கு எவ்வித பிரச்சினையுமில்லை. ஆனால் அன்று பிரதமராக பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க கட்டார் சாரிட்டி (Qatar Charity) மீதான தடையை விரைவில் நீக்குவதாக கட்டார் தூதுவரிடம் உறுதியளித்திருந்தார். ஆனால் தற்போது அவர் ஜனாதிபதியானதன் பின்னரும் அதன் மீதான தடையை நீக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

அதே போன்று அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் கட்டாருக்கு சென்ற சந்தர்ப்பத்தில் கட்டார் சாரிட்டி மீதான தடையை நீக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் அது நீக்கப்படவில்லை. அரசாங்கத்தில் உள்ள இனவாதிகள் குறித்த தடையை நீக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கிறார்களா என்று சந்தேகம் உள்ளது. 

எனவே கட்டார் சாரிட்டி உட்பட நாட்டின் அடிப்படை வசதிகளின் முன்னேற்றத்திற்காக உழைத்த அமைப்புக்கள் மீதான தடைகளை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார். - Siyane News

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.