யூ.கே. காலித்தீன்


மர்ஹூம் ரசீன் ஞாபகார்த்த T10 மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி கல்முனை சாஹிராக் கல்லுரி மைதானத்தில் இடம்பெற்றது.

”சஹிரியன்ஸ் சுப்பர் ஹீரோஸ் 97” அணியின் தலைவர் அஞ்ஞபின் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற சுற்றுப் போட்டியானது ஓர் அணிக்கு 11 பேர் கொண்ட பத்து ஓவா்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டின் சம்பியினாக ”பவர்பிளயர் 96” அணியினர் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டனர். 

நேற்று (14) காலையில் ஆரம்பமான மர்ஹூம் ரசீன் ஞாபகார்த்த T10 மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ”சஹிரியன்ஸ் சுப்பர் ஹீரோஸ் 97” மற்றும் ”பவர் பிளயர் 96” அணியினர்களுக்கிடையிலான மூன்று தொடர்கனைக் கொண்ட சுற்றுப் போட்டியானது மாலை வேலையில் நிறைவுக்கு வந்தது.

இதில் விளையாடிய ”பவர் பிளயர் 96” அணியினர் 1க்கு2 என்ற ரீதியில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

இறுதிச் சுற்றுப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய ”பவர் பிளயர் 96” அணியின் தலைவர் ஏ.எம்.எம். நசீர்கான் மௌலானா தனது அணியினரை களத்தடுப்பினை எடுத்ததற்கிணங்க ”சஹிரியன்ஸ் சுப்பர் ஹீரோஸ் 97” அணியினர் நிர்ணயிக்கப்பட்ட பந்து வீச்சு முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 51 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ”பவர் பிளயர் 96” அணியினர் 07 ஓவர்கள் முடிவில் 02 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 53 ஓட்டங்களை பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதிச் சுற்றுப் போட்டியின் ஆட்ட நாயகனாக ”பவர் பிளயர் 96” அணியின் துடுப்பாட்ட வீரர் ஏ.எம். நஸ்வி தெரிவு செய்யப்பட்டதோடு, சுற்றுப் போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக ”சஹிரியன்ஸ் சுப்பர் ஹீரோஸ் 97” அணியின் துடுப்பாட்ட வீரர் யு. பாஹிம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இச்சுற்றுப் போட்டிக்கு மர்ஹூம் ரசீனின் சகோதரேரான சமூர்த்தி வங்கியின் உதவி முகாமையாரும், சிரேஸ்ட ஊடகவியளாலருமான ரியாத் ஏ. மஜிட், மர்ஹூம் ரசீனின் பிள்ளைகள் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும், கௌரவ விருந்தினர்களாக விக்டோரியஸ் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரும் சுவிஸ்லாந்தின் வதிவிட பிரதிநிதியுமான ஏ.எம்.எம்.பாறுக் மௌலானா மற்றும் இலங்கை வங்கியின் கொழும்பு கிளையின் முகாமையாளரான ஏ.எம்.எம். முஸ்தக்கிம் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.