இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் ஸாதிக் - லிபிய தூதுவர் சந்திப்பு

Rihmy Hakeem
By -
0

 இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் இலங்கைக்கான லிபியா நாட்டின் தூதுவர் மதிப்பிற்குரிய நாசர் Y. M. அல்புர்ஜானி அவர்களை சந்தித்தார்.

இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முப்தி முயீன் இலங்கைக்கான லிபியா நாட்டின் தூதுவர் மதிப்பிற்குரிய நாசர் Y. M. அல்புர்ஜானி அவர்களை சமீபத்தில் லிபியா தூதரகத்தில் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் ; இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் அதில் பிரதானமாக இளைஞர்கள் முகம் கொடுக்கும் சவால்கள் மேலும் இளைஞர்களுக்கான வெளிவிவகார வாய்ப்புகள் இளைஞர்களின் அரசியல் துறை உட்பட துறைசார் வகிபாகங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

மேலும் இக்கலந்துரையாடலின் போது லிபியா நாட்டின் தூதுவர் குறிப்பிடுகையில் ; லிபியா நாட்டின் அரசியல் துறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் பிரதானமாக இளைஞர்களுடைய வகிபாகம் மிகவும் பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில் கடந்த காலங்களில் லிபிய நாடானது ஒரு வகை யுத்த பூமியாக/  போராட்ட பூமியாக இருந்தது தற்போது பொருளாதாரத் துறையில் மறுமலர்ச்சியை நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இக்கலந்துரையாடலின் பின்னர், இரு நாடுகளினதும் உறவு இளைஞர்களின் ஊடாகவும் மேலும் வலுப்படுத்த சிறந்த நடவடிக்கைகள் எதிர்காலங்களில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)