அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் (30) மருதானையில் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாளிகாகந்தை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.