அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல விடயங்களை நல்லது என கூறுவதற்கும், தவறுகள் ஏற்படும் போது நிபந்தனையின்றி அதை எதிர்ப்பதற்கும் இருமுறை சிந்திக்கப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.அமைச்சுச் சலுகைகளை பெற இடம்பெறும் சங்கீதக்கதிரை போட்டியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாடு வீழ்ந்துள்ள பேரிடலில் இருந்து மீளக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கள் இடம் பெற்றதாக கூறி தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு மாத்திரம் இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், முழு நாட்டிற்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டிய தருணத்தில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு மாத்திரம் இழப்பீடு வழங்குவதற்கு தாம் உடன்பாடு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் வரலாற்றில் முதல் தடவையாக மல்யுத்த போட்டியில் இலங்கைக்காக முதல் பதக்கத்தை வென்று புகழ் சேர்த்த வீராங்கனை நெத்மி அஹிம்சா பெர்னாண்டோ மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் டி.சுரங்க குமார ஆகியோரை பாராட்டும் முகமாக பன்னல வேல்பல்லவில் அமைந்துள்ள விளையாட்டு வீராங்கனையின் இல்லத்திற்குச் சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டிற்கு புகழைக் கொண்டு வந்த விளையாட்டு வீராங்கனையையும் அவரது பயிற்றுவிப்பாளரையும் ஊக்குவிப்பதற்கும், எதிர்கால வெற்றிகளுக்கும் தன்னால் வழங்க முடியுமான அனைத்து ஒத்துழைப்பையும்  வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வீராங்கனை நெத்மி அஹிம்சா மற்றும் பயிற்றுவிப்பாளர் சுரங்க குமார ஆகியோரின் எதிர்கால பணிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் விசேட நிதியுதவி வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.