வெளிநாடுகளுக்குச் செல்லும் போது சட்ட ரீதியாக மாத்திரம் விசா பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறில்லை எனில் ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதாக மக்களின் பணத்தை பெற்று ஏமாற்றும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்தநிலையில், அவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.