முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கம் 400 மில்லியன் ரூபா அல்ல, 4 ரூபா கூட செலவிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திடீரென நாடாளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் விளக்கமளிக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதிக்கு அரசாங்கம் 400 மில்லியன் ரூபா அல்ல, 4 ரூபா கூட செலவு செய்யவில்லை. ஆனால், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதைவை மனைவிகளுக்கு வீடுகளை வழங்கி அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளதென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.