(ஹஸ்பர்)
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப்
பகுதியில் இயங்கி வரும் நத்வதுல் புஹாரி அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா (19)
குறிஞ்சாக்கேணியில் உள்ள ஷரீஆப் பிரிவு வளாகத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் அல்-ஹாபிழ் அஷ்ஷெய்க் எஸ்.எம்.முனீர்
தலைமையில் இடம்பெற்ற குறித்த பட்டமளிப்பு விழாவில், கல்லூரியின் தலைவர் முன்னாள்; கிழக்கு
மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இதில் 2019, 2020, 2021, 2022 ஆண்டுகளில் வெளியான
மாணவர்களுக்கான பட்டங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. இதில் அல்-ஹாபிழ், அல்-ஆலிம்,
கத்முல் புஹாரி ஆகிய பட்டங்களை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வுக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி
உட்பட பெற்றோர்கள், நலன் விரும்பிகள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.