(ஹஸ்பர்)

இந்திய தமிழ்நாட்டின் ஊடாக வழங்கப்பட்ட மனிதாபிமான உலர் உணவுப் பொதிகள் (21) கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரினால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 31 கிராம சேவையாளர் பிரிவுக்குமாக 10 கிலோ அடங்கிய 500 பொதிகளுள் சுமார் 2500 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் அத்தோடு, 750 குடும்பங்களுக்கான பால்மா பக்கெட்டுகளும் வழங்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 31 கிராம சேவையாளர் பிரிவுகளுள் இரண்டு கிராம சேவையாளர்கள் பிரிவுகளுக்கு இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பைசல் நகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள 220 குடும்பங்களுக்கும், அண்ணல் நகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள 180 குடும்பங்களுக்கும் இந்நிவாரணப் பொருட்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலாளர், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் .முஜீப் முதலானவர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.