மூன்று வர்த்தக நிலையங்களை உடைத்துக்கொண்டு உட்புகுந்த வேன்

Rihmy Hakeem
By -
0

 எஸ். சதீஸ்

ஹட்டனில் இருந்து பொகவந்தலாவை கெம்பியன் பகுதியினை நோக்கி பயணித்த வான் ஒன்று, கெம்பியன் நகரில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களை உடைத்து கொண்டு உட்புகுந்ததில், மூன்று சிறுவர்கள் காயங்களுக்கு உள்ளாகி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்த சம்பவம் இன்று பகல் 12மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு சலூனும் அடங்குவதாகவும் முடி வெட்டுவதற்காக சலூனுக்கு  வருகை தந்திருந்த 03, 06, 8.வயதுடைய  சிறுவர்களே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் குறித்த  மூன்று வர்த்தக நிலையங்களும் பகுதிஅளவில் சேதமடைந்துள்ளதோடு வானின்  சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட  வானின் சாரதி மது போதையில் இருந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)