நாட்டில் எரிபொருள் கிடைக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான சகல தகவல்களை அறிந்து கொள்வதற்கு புதிய செயலியை (App) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் ஜயந்த டி சில்வா கருத்து தெரிவிக்கையில்
நாட்டில் எரிபொருள் கிடைக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். விரைவில் இந்த செயலி பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்களை இந்த செயலியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரவிருக்கும் எரிபொருள் தொடர்பான சகல தகவல்களையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்
அதன்படி, கிவ்.ஆர் குறியீடு முறையின் கீழ் குறித்த ஒரு பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஏனைய பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கான வாய்ப்பை இந்த செயலியின் ஊடாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் மூலம் நுகர்வோர் எரிபொருளை பெற்றுகொள்ள முடியும்.
மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளும் போது அந்த பகுதிகளில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.