வெற்றிகரமாக நடந்து முடிந்த BATCH MATCH கிரிக்கெட் சுற்றுப்போட்டி
கடந்த 11 ம் திகதி கஹட்டோவிட்ட பொது மைதானத்தில் ஆரம்பமான அணிக்கு 7 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (14) மாலை நிறைவு பெற்றது.
GCE O/L வகுப்பு வாரியாக நாடாத்தப்பட்ட இந்த சுற்றுப்போட்டியில் அல் பத்ரியா மட்டுமல்லாது ஊரில் வசிக்கும் சம வயதுடையவர்களும் கலந்து கொண்டதோடு போட்டிகள் 30 வயதுக்கு மேல் மற்றும் 30 வயதின் கீழ் என இரண்டு பிரிவுகளாக நடாத்தப்பட்டது.
மொத்தமாக 39 அணிகள் கலந்து கொண்ட இந்த சுற்று போட்டியில் 30 வயதுக்கு உட்பட்ட 24 அணிகளில் நப்ராஸ் தலைமையிலான 2013 O/L அணி சாம்பியன் பட்டம் வென்றது.
முஷர்ரப் தலைமையிலான 2018 O/L அணி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது.
30 வயதுக்கு மேற்பட்ட 15 அணிகளில் ஆஸிர் தலைமையிலான 2006ஆம் ஆண்டு அணி சாம்பியன் பட்டம் வென்றதோடு இரண்டாம் இடத்தை முபீன் தலைமையிலான 1999ம் ஆண்டு அணி கைப்பற்றியது.
Over 30
Best Bowler - Musadiq (6wkts)
Best batsman - Sabry (192 Runs )
Player of the series - Sabry (192 runs & 1 wkt)
Under 30
Best Bowler - Nafraz (6wkts )
Best batsman - Rimsi (155runs)
Player off the series - Rimsi (155 Runs & 5wkts )
இந்த தொடர் ஒரு கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கும் நோக்கில் ஏற்பாட்டுக்குழுவினரால் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி : Kahatowita Sports Information