(பஸீர்)
'போராட்டம் முடியவில்லை. அரசாங்கத்தின் அடக்குமுறையை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்' என பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்தார்.
பிணை கையெழுத்திட்ட பின்னர் நீதிமன்றுக்கு வெளியே வந்து ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, 'மக்கள் அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் ஏனைய நெருக்கடிகளை மையப்படுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இன்று போராட்டங்கலில் ஈடுபட்டவர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு மக்கள் நாட்டில் ஒரு கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை கோரியே போராட்டம் செய்தனர். அதனை நோக்கிய எமது போராட்டம் தொடரும். போராட்டம் இன்னும் முடியவில்லை.
கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை விடுவுவிக்கும் வரை நாம் ஓயப் போவதில்லை. அதற்காக ஒன்றிணையுங்கள். கட்டமைப்பு மாற்றம் வரை நாம் போராடுவோம்' என தெரிவித்தார்.