இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் 4 பேர் இந்தியாவின் ராமேஸ்வரத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மன்னாரை சேர்ந்த நால்வரே இவ்வாறு படகு மூலம் இன்று காலை ராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.
இதேவேளை குறித்த நபர்களிடம் மரைன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடதக்கது.