ரெட்டாவின் வங்கிக் கணக்கில் ஐம்பது இலட்சமா...?!

  Fayasa Fasil
By -
0


காலிமுகத்திடல் போராட்டக்கள முன்னணி செயற்பாட்டாளர் ரெட்டாவின் வங்கிக் கணக்கில் மா்ம நபர் ஒருவரால் ஐம்பது லட்சம் ரூபா வைப்பு செய்யப்பட்டுள்ளது.

எனினும் தான் அப்பணத்தை எடுக்கவோ, பயன்படுத்தப் போவதோ இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பணம் தவறாக வைப்புச் செய்யப்பட்டமை குறித்து அவர் வங்கிக் கணக்கு வைத்துள்ள சம்பத் வங்கிக்கும் முறைப்பாடு செய்துள்ளார்.

இதுவரை காலமும் எத்தனையோ நெருக்கடிகளின் மத்தியிலும் போராட்டக்களத்தில் தாக்குப் பிடித்து முன்னேறிச் செல்ல உறுதுணையாக இருந்த நேர்மை, விலைபோகாத தன்மை என்பவற்றை தொடர்ந்தும் தான் பின்பற்றப் போவதாகவும், எந்தவொரு கட்டத்திலும் அவற்றில் இருந்து விலகப் போவதில்லை என்றும் ரெட்டா தொடர்ந்தும் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)