எமது வாழ்க்கையானது பலவித சுவாரஷ்யமான விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றது.நாம் நினைக்கும் விடயங்கள் , நினைத்துக்கூட பார்க்க முடியாத தருணங்கள் இன்பம், துன்பம் ,அதிர்ச்சி, சோகம், கவலை ,வெற்றி, தோல்வி என பல பக்கங்களை நாம் விரும்பியோ விரும்பாமலோ பார்க்கத்தான் வேண்டும். கருவறை முதல் கல்லறை வரை நாம் தினம் தினம் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டே தான் இருக்க வேண்டும். ஏனெனில் வாழ்க்கை பாடம் அப்படியானது. தினம் எமக்கு ஏதாவது ஒன்றை அனுபவப் படுத்திக் கொண்டே இருக்கும். நம்பக் கூடியது தான். நம்பாவிட்டாலும் நடக்கும் யதார்த்தம் அதுதான். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு தாயின் மடியில் பிள்ளையாய் வளர்ந்து அதன் பருவங்களை அடையும் வரையில் அந்தந்த வயதுக்கு  ஏற்ப அனுபவப் பாடங்களை யாரும் கற்றுக் கொடுக்காமலேயே கற்றுக் கொள்கிறோம். பாடசாலை காலத்தில் பல வீடுகளில் இருந்தும் வெவ்வேறுபட்ட சூழல்களில் இருந்தும் வரக்கூடிய பிள்ளைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. நட்பு மலர்கிறது. கட்டிளமைப் பருவம் அடைந்து இன்னும் பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்கிறோம். அதிபர், ஆசிரியர் என வட்டம் விரிகின்றது. படிப்படியாக கல்லூரி, விடுதி வாழ்க்கை, தொழில், திருமணம் என இன்னும் பல கட்டங்களை அடைகின்றோம். மனது ஏற்றுக் கொள்ளும் பருவத்தை அடையும் அடிப்படையில் எமக்கான ஒவ்வொரு கதவும் திறக்கப்படுகின்றது. நாமும் திறக்கப்படும் ஒவ்வொரு கதவூடாகவும் நுழைந்து கொண்டிருக்கின்றோம். சொல்லப்போனால் ஒரு பயணியாக எனது பயணம் தொடரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுவரையிலும் எம்மைப் படைத்து, போஷித்து வாழ வைத்துக் கொண்டிருக்கும் எம் இறைவனாகிய ரப்புல் ஆலமீனுக்கு எல்லாப்புகழும்... அல்ஹம்துலில்லாஹ்..!  ஒவ்வொரு கட்டத்திலும் எம்மை நாமே பட்டை தீட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு எமக்கு உதவியாக அமைவது அனுபவம். அனுபவம் நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கும். கற்றுத் தந்து கொண்டும் இருக்கும். எனவே மண்ணறையை சந்திக்கும்வரை கற்றுக் கொண்டே இருப்போம்.

Fb : Fayasa Fasil ...✍️

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.