மீரிகம DS இன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி

Rihmy Hakeem
By -
0

 கம்பஹா மாவட்டம், பாந்துராகொட சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (13) QR குறியீடுகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீரிகம பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் முயற்சியை மேற்கொண்டவர் திவுலபிடிய பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)