இன்றைய நாள் சிறந்த நாள் - அஸ்ஹர் அன்ஸார் (FRSPH)

  Fayasa Fasil
By -
0

ஒரு சிறந்த நாளாக இன்றைய நாளை  கொண்டாடுவதற்கான முதல் படி ....என் வாழ்க்கையில் இன்னும் ஒரு அழகான நாள் கிடைத்திருக்கிறது என்று ஏற்றுக் கொள்வதாகும். ஏற்றுக்கொண்டு சந்தோசப்படுவதாகும்.
இன்றைய நாள் எனக்கு அற்புதமான நாளாக இருக்கட்டும்..
மிகவும் வளமான நாளாக அமையட்டும்..
நேற்றைய நாளில்  என்ன  நடந்ததோ, அது எப்படி கழிந்ததோ அது அப்போதே நடந்து முடிந்துவிட்டது.  
இன்றைய நாள் என் வாழ்க்கையில்   ஒருமுறைதான் வந்திருக்கிறது. இனிமேல் என் உயிர் இருக்கும் வரை வரவே வராது.
இது மிகவும் புதிய நாள்!
எதுவும் எழுதப்படாத புத்தம் புதிய புத்தகம் போன்றது.
இன்றைய நாள் எனக்கானது.
இன்றைய நாளை பயனும் பெறுமதியும் நிறைந்த நாளாக அமைத்துக் கொள்வேன்.. என்று மனதார சொல்லி  அதற்காக உழைப்போம்.
நல்ல பல விடயங்களால் இந்த நாளை அலங்காரம் செய்வோம்.....
▪️▪️▪️▪️
அஸ்ஹர் அன்ஸார் (FRSPH)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)