தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) புதிய பதிவுகளை எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு இடம்பெறாது என, தகவல் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயினும் ஏற்கனவே பதிவு செய்த நபர்களுக்கு இதன் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றின் கணனிக் கட்டமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு, ICTA இனால் National Fuel Pass திட்ட பதிவுகள் உருவாக்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.