கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளின் நீர், மின் கட்டணங்களை அரசாங்கம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - இம்ரான் எம் பி நாடாளுமன்றில் வேண்டுகோள்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளில் இதுவரை காலமும் அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுவந்த நீர்க்கட்டணங்களை இனிமேல் பாடசாலைகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அதே போன்று மின் கட்டணங்களை செலுத்துவதற்கு ரூபா 1200/- வழங்கப்படுகிறது. வேறு மாகாணங்களில் இதைவிட கூடுதலாக வழங்கப்படுகிறது இதனால் கிழக்கு மாகாண பாடசாலைகள் கஸ்டத்தை எதிர்கொள்வதாகவும் இந்த கட்டணங்களை அரசாங்கங்கம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பா உ இம்ரான் மகரூப் இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பான அவரது உரையின் போது அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற அம்பியூலன்ஸ்களுக்கு QR முறையை ஊடாக 50 லீட்டர் பெறுவதற்கான வாய்புக்கள் மாத்திரம் காணப்படுவதாகவும் அதேபோன்று ஆட்டோகளுக்கும் 5 லீட்டர் போதாமையால் இந்த நிலைமையினை கருத்திற்கொண்டு அம்பியூலன்ஸ், ஆட்டோகளுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.