நிலக்கரி விநியோகத்தர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சட்டரீதியாக தீர்க்கப்படும் வரையில் விநியோகம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில், நிலக்கரியினை விநியோகிப்பதற்கு விலை மனுவினை பெற்றுக்கொண்ட விநியோகத்தர்கள் மீது இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்;கப்படுகின்றது.

அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியினை பெற்றுக்கொள்வதற்காக, விநியோகத்தர்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை தீர்க்கும் நோக்கில் வலுசக்தி அமைச்சருக்கும், வி;நியோகத்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை சட்டரீதியாக தீர்ப்பது மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பிலான மாற்று யோசனைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.