37,000 மெற்றிக் டன் 92 ஒக்டேன் ரக பெற்றோல் மற்றும் ஒரு மெற்றிக் டன் மசகு எண்ணெய் என்பனவற்றை கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படுகிறது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 40,000 மெற்றிக் டன் டீசல் தரையிறக்கம் நாளை நிறைவுசெய்யப்படவுள்ளது.

அதேநேரம், கொடுப்பனவு செலுத்தப்பட்டால் 40,000 மெற்றிக் டன் டீசல் கப்பல் விடுவிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.