காத்தான்குடி மட்/மம/ மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவிகள்  கிழக்கு மாகாண மட்ட சதுரங்க போட்டியில் பங்குபற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டதை பாராட்டி கெளரவிக்கும் ம நிகழ்வு செவ்வாய்க்கிழமை (06) பாடசாலையில் நடைபெற்றது. 

பாடசாலை அதிபர் அஷ்ஷைய்க் யூ.எல். மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் முதர்ரிஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கிழக்கு மாகாணத்தின் பல முன்னணி பாடசாலைகள் கலந்துகொண்ட இப்போட்டியில் போட்டியிட்ட ஏனைய பாடசாலைளை  மீராபாலிகா மாணவிகள் வென்றுள்ளனர். 

மாகாணத்தில் முதலிடம் பெற்ற  மட்டக்களப்பு புனித சிசிலியா கல்லூரி மீராபாலிகா மகா வித்தியாலயத்தை விட அரைப் புள்ளி (தசம் ஐந்து) அதிகம் பெற்று முதலிடத்தை தட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த மாணவிகள் அஸ்ஸெய்யித்  ஜெயின் மெளலானா பள்ளிவாயல் முன்றலில் இருந்து பாடசாலை வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பின்னர் பாடசாலையில் வைத்து பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.