உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படாது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை விடுவிப்பது குறித்து ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. 

முன்னைய வாரம் பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வழக்குத் தொடராமல் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அரசின் அவதானத்துக்குக் கொண்டு வந்திருந்தார். 

இந்த உரையையடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரவூப் ஹக்கீமை உடன் சந்திக்குமாறு தகவல் அனுப்பியிருந்தார்.

ரவூப் ஹக்கீம் அதேதினம் ஜனாதிபதியைச் சந்தித்தபோது, இவ்வாறு வழக்குத் தொடராது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விபரங்களைக் கேட்டுள்ளார். 

சிறு சிறு குற்றங்களுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்களது விபரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சிறுசிறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் எவ்வித விசாரணைகளுமின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.