கொழும்பு – தெமட்டகொடையில் தொடரூந்து ஒன்று கட்டிடமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த தொடரூந்து, தெமட்டகொட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் இருந்து வெளியில் பாய்ந்தநிலையில், அந்த வளாகத்திலுள்ள பழைய கட்டிடமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், கட்டிடத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 

பராமரிப்பிற்காக கொண்டு வரப்பட்ட தொடரூந்தே நிறுத்த வரம்பை தாண்டி சென்று பழைய கட்டிடத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

தொடரூந்து சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டமை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.