இன்று (04) கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் நடைபெற்ற FFSL Gold கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட சுற்றுபோட்டியில் திஹாரிய யூத் அணியை 1 - 0 என்ற  கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி கஹட்டோவிட்ட FC (KFC) அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

 ஆட்டம் தொடங்கிய முதல் பத்தாவது நிமிடத்தில் அறிமுக வீரர் அம்மார் கோல் புகுத்தினார்.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் புகுத்தவில்லை என்பதனால் KFC அணி 1 - 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.

 பிரதேச அணி ஒன்று சூப்பர் லீக் விளையாடிய அனுபவம் உள்ள திஹாரிய யூத் அணியை வெற்றி கொண்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

Source : Kahatowita Sports Information 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.