நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதுடன், சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மருந்துப் பற்றாக்குறை மற்றும் மருந்துப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் போக்குவதற்கான அவசர முறைமையின் அவசியத்தை வலியுறுத்திய ரணில் விக்கிரமசிங்க, உலக வங்கி மற்றும் சர்வதேசத்துடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். மருந்துகள் உட்பட சுகாதாரத் துறையில் உள்ள பிற தேவைகளைப் பற்றிய பண நிதியம், சுகாதார அமைச்சு, மருத்துவ விநியோகப் பிரிவு, அரச மருந்து ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனம், அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் போன்றவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் உள்ள குறைபாடுகளை சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. எனவே, சுகாதார அமைச்சினால் ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமித்து மாதாந்த முன்னேற்ற மீளாய்வைப் பெறுமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.