சர்வதேச தடையின் விளிம்பில்   இலங்கை உதைப்பந்து

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில் உதைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு தடை விதிக்கப்படும்

- இலங்கை  உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர்

இலங்கை  உதைப்பந்தாட்டம்  தற்போது உலக மட்டத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இந்த நிலை தொடருமானால் இலங்கை உதைப்பந்தாட்ட  சம்மேளனத்தை இரண்டு மூன்று நாட்களில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) தடை செய்யக்கூடும் எனவும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.  

கொழும்பில்  இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை  உதைப்பாந்தாட்ட  சம்மேளனத்தின் பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து  உதைபந்தாட்ட  சம்மேளனத்தின்  பொறுப்புக்களை  இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு வழங்க விளையாட்டு அமைச்சு அண்மையில் தீர்மானித்ததன் காரணமாகவே இலங்கைக்கு FIFA இந்தத் தடையை விதிக்க இருக்கிறது.

மே 31 ஆம் திகதிக்கு முன்னர்  தேர்தலை நடத்தி  முடிக்க வேண்டிய நிலையில்   எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதற்கான தீர்மானிக்கப்பட்டிருந்தது இந்த முடிவை  விளையாட்டு அமைச்சர் அண்மையில்  மாற்றினார். கடந்த  22ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது மாற்றப்பட்டது.

  எதிர்வரும் 23ஆம் திகதி  தேர்தலை நடத்துவதற்கான   இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் திகதி நிர்ணயித்திருந்தது. இதனால், தற்போதைய இலங்கை உதைப்பந்தாட்ட  சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ பதவிக்காலம்  கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதியுடன் முடிவடைவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், உதைபந்தாட்ட சம்மேளனத்தின் விவகாரங்களை இடைக்கால  குழுவிற்கு அல்லது உரிய அதிகார சபைக்கு வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாராகி வருவதாக நேற்று (27ஆம் திகதி) தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் இது தொடர்பில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம்  அமல் எதிரிசூரியவிடம் வினவிய போது   இது குறித்து தங்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை என்று கூறினார்.

எவ்வாறாயினும் , உதைப்பாந்தாட்ட  சம்மேளனத்தின் செயற்பாடுகளில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு இடம்பெறுவதன்  காரணமாகவே FIFA இலங்கைக்கு கால்பந்துக்கு  தடையை விதித்ததாக  உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் விளக்கமளித்தார்.இந்தப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு  FIFAவிடம் தான் கேட்டதாகவும்  அவர் கூறினார்.

எவ்வாறாயினும், சர்வதேச ரீதியில் இலங்கை கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடலாம் எனவும்  அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது கட்டாரில் பயிற்சி பெற்று வரும் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியின் பயிற்சியிலும் , ஒக்டோபர் 2ஆம் திகதி உஸ்பெகிஸ்தானில் ஆரம்பிக்கவுள்ள இலங்கை அணியின் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண சுற்றுப்பயணத்திலும் இது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் விளக்கினார்.

இலங்கை  உதைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு வழங்கும் நிதியை  FIFA தற்காலிகமாக இடைநிறுத்தியதன் காரணமாக, இலங்கை தேசிய அணிக்கு  பயிற்சி வழங்கும்  வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களின் சேவையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த உள்ளதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.

தடை விதிக்கப்படும் பட்சத்தில்  இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாது போகலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.