உலகக்கிண்ண டி20 தொடருக்கான போட்டிகளின் இன்றைய (21) போட்டியொன்றில் அயர்லாந்து - மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 17.3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களைப்பெற்று பெரு வெற்றி பெற்றது.
அயர்லாந்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் 12 போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துள்ளதுடன், அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.