மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட  மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் 
****************************

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தென் அந்தமான் கடல் பிராந்தியத்துடன் இணைந்ததாக வட அந்தமான் கடல் பிராந்தியத்திற்கு மேலாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது. இது மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

பேருவலை  தொடக்கம் காலி,  மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.