மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி நிர்வாகத்தினரால்  வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அவசியமான பொருட்கள் இன்று (09) பகிர்ந்தளிக்கப்பட்டன.

அத்துடன், வைத்தியசாலை ஊழியர்களுக்கும் அவர்களால் இனிப்புக்களும் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி நிர்வாகத்தினர், கஹட்டோவிட்ட YMMA கிளை தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ், அஷ்ஷெய்க் முனீர் முளப்பர் மற்றும் நிட்டம்புவ - மல்வத்தை விகாரையின் விகாராதிபதியும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டிலும் முஅஸ்கர் நிர்வாகத்தினரால் இவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.