கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலை மாணவர்களிடத்தில் ஊடக அறிவினை மேம்படுத்தல் மற்றும் பாடசாலை மட்டத்தில் ஊடக கழகங்களை உருவாக்கும் சியன ஊடக வட்டத்தின்  செயற்றிட்டத்தின் ஆரம்ப செயலமர்வு மினுவாங்கொடை, கல்லொழுவ அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (29) காலை ஆரம்பமானது.

பாடசாலையின் அதிபர் எம்.டி.எம்.ஆஸிம் தலைமையில் ஆரம்பமான இச்செயலமர்வில் சியன ஊடக வட்டத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.இசட்.அஹ்மத் முனவ்வர், உப தலைவர் எஸ்.எம்.சாஜஹான், செயலாளர் எஸ்.ஏ.எம்.பவாஸ், சியன நியூஸ் ஆசிரியர் ரிஹ்மி ஹக்கீம் மற்றும் மூத்த ஊடகவியலாளர் நிலாம், ஊடகவியலாளர்களான பௌஸுல் அலீம், அறபாத், பாடசாலையின் உப அதிபர், ஆசிரியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.