இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முப்தி முயீன் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் H.E.காலித் நாஸர் அல் அமீரியை சமீபத்தில் ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தில் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் அதில் பிரதானமாக இளைஞர்கள் முகம் கொடுக்கும் சவால்கள், மேலும் இளைஞர்களுக்கான வெளிவிவகார வாய்ப்புக்கள், இளைஞர்களின் அரசியல் துறை உட்பட துறைசார் வகிபாகங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
மேலும் இக்கலந்துரையாடலின் போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் குறிப்பிடுகையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இலங்கையின் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைக்கின்ற வகையில் Youth Exchange Program ஒன்றை நடத்த விரும்புவதாக தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் பின்னர், இளைஞர் பாராளுமன்ற பிரதமர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடைய தலைவர் ஆகியோரை சந்தித்து இக்கலந்துரையாடல் பற்றி கூறியதோடு இளைஞர் அமைச்சின் ஊடாக இச்செயற்பாட்டை எதிர்காலத்தில் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம்.
இக்கலந்துரையாடலின் பின்னர், இரு நாடுகளினதும் உறவு இளைஞர்களின் ஊடாகவும் மேலும் வலுப்படுத்த சிறந்த நடவடிக்கைகள் எதிர்காலங்களில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டனர்.
அத்தோடு இச்சந்திப்பின் விஷேட அம்சமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் H.E.H.E.காலித் நாஸர் அல் அமீரிக்கு "வியாபாரம் தொடர்பாக புராதன ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கான வருகை" என்பதை சித்தரிக்கும் வகையில் நினைவுச்சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.