புறக்கோட்டை மொத்த வியாபாரிகளால் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளது. .

இதன்படி, அவர்களால் இறக்குமதி செய்யப்படும் மாவின் மொத்த விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

திறந்த கணக்கு மூலம் கோதுமை மாவை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமையினாலேயே இந்த விலை வீழ்ச்சியை சாத்தியமாக்கியுள்ளது.

இம்முறையின் ஊடாக ஏற்கனவே பெருமளவிலான கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதனால் வழக்கமான அளவை விடவும் பாணின் விலையிலும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாணின் குறைந்தபட்ச விலை 190 ரூபாவாகும்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.