பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் மூலம் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் நாட்டில் செல்வாக்கு செலுத்துவார்கள் என களனிப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்பத் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, பிரித்தானியாவின் புதிய பிரதமரின் ஊடாக இலங்கையின் அதிகாரப் பகிர்வில் புலம்பெயர் தமிழ் மக்கள் விசேட செல்வாக்கை செலுத்த முடியும்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வேறு நாடுகளில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டமை மற்றும் ரிஷி சுனக்கை பிரதமராக நியமித்தமை தொடர்பில் களனிப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்பத் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

ரிஷி சுனக் பிரிட்டனின் 57வது பிரதமர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.