தாமரைக் கோபுர வளாகத்தின் திறக்கும் நேரம் திருத்தப்பட்டுள்ளது.

அதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

அந்த நாட்களில் காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை வளாகத்தை பார்வையிடலாம்.

இதேவேளை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை டிக்கட்டுகள் வழங்கப்படவுள்ளதுடன், இரவு 11.00 மணி வரை பார்வையிட முடியும்.

இதேவேளை தாமரைக் கோபுர வளாகத்திற்குச் செல்லும் போது இடைத்தரகர்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என அந்நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேற்படி அறிவிப்பின் ஊடாக, குறித்த நிறுவனம், பயணங்களுக்கான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

074 201 9743 (அழைப்பு/WhatsApp)
011 242 7874
info@colombolotustower.lk


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.