இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் ஆதரவாக 20 வாக்குகளுடனும், எதிராக 07 வாக்குகளுடனும், 20 நாடுகள் வாக்களிக்காமலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய இராச்சியத்தின் ஜெனீவாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சைமன் மேன்லி இலங்கை தொடர்பான பிரேரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இன்று முன்வைத்தார்.

கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டெனேக்ரோ, வடக்கு மாசிடோனியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் 30 நாடுகளை உள்ளடக்கிய முக்கிய குழுவால் இலங்கை தொடர்பான இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டது.

கடந்த 18 மாதங்களில் இலங்கையில் ஏற்பட்ட சில முக்கிய முன்னேற்றங்கள், புதிய பொருளாதார நெருக்கடி, வெகுஜன எதிர்ப்புகள், மற்றும் அரசாங்கத்தில் மாற்றம், இவை அனைத்தும் நாட்டின் மனித உரிமைகள் நிலைமையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

முன்னதாக பேசிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட புதிய வரைவு தீர்மானத்தை திட்டவட்டமாக நிராகரித்தார்.

புதிய தீர்மானத்தை நிராகரித்த அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் அனுமதியோ அல்லது ஆலோசனையோ இன்றி இந்த வரைவுத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.

புதிய தீர்மானம் நாட்டுக்கு உதவாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.