இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை காணப்படுகிறது. இது மேலும் விருத்தியடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனபடியினால் நாட்டின் அனேகமான இடங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். 

ஏனைய பிரதேசங்களில்  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின்  சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய  சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் 
****************************

இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை காணப்படுகிறது. இது அடுத்துவரும் 48 மணித்தியாலங்களில் மேலும் விருத்தியடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனபடியினால்  ஹம்பாந்தோட்டை தொடக்கம் மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து  காற்று வீசும். 

மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம்  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக்  காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்தகாற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துரையிடுக

  1. Whatever the reason, blackjack is an ever-popular option at Indian stay on line casino websites. Fire up a Live Dealer game with dice right now, take your seat alongside other OJOers, place your bets and be half of} the Vegas-style motion. A stay on line casino is much like a land-based on line casino end result of|as a end result of} they try to mirror the brick-and-mortar ambiance. Live casinos 바카라사이트 do that by integrating quantity of} tables per studio, making punters feel like they belong. Additionally, the stay chat facility which enables the communication between players adds to the social side of playing.

    பதிலளிநீக்கு

Blogger இயக்குவது.