(அஷ்ரப். ஏ .சமத்)

 கடந்த 9 வருட காலத்திற்குள் 2008 - 2019 ஆண்டு காலப்பகுதியில் பல வரி செலுத்தும் நிறுவனங்கள் ஊடாக வருமானமாகப் பெறவேண்டிய  அமெரிக்க டொலா் 36.5 பில்லியனை இலங்கை இழந்துள்ளது என கைத்தொழில் அபிவிருத்தி பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சா் டொக்டா் ரமேஸ் பத்திரன தெரிவித்தாா். 

மேற்கண்டவாறு கொழும்பில் உள்ள  கம்பனிகளை பதிவு செய்யும்  திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே  அமைச்சா் இத் தகவல்களைத்  தெரிவித்தாா். இலங்கையில் புதிய கம்பனி பதிவுகளை நாடாளரீதியில் கணினி மூலம் பதிவு செய்யும் முறைமையை  அமைச்சா் ஆரம்பித்து வைத்தாா்.

மேலும் அமைச்சா் கலாநிதி ரமேஸ் பத்திரன தெரிவிக்கையில் ,

இம்முறைமை மூலம் யாழ்ப்பாணத்தில் அல்லது மாத்தறையில் இருந்தும்  தமது பிரதேசத்திலிருந்தே புதிய கம்பனிகளை பதிவு செய்வதற்காக இனி எவரும் ஆயிரக்கணக்கான தகவல்களுடன்  கொழும்புக்கு வரவேண்டியதில்லை. eRoC  (ஈஆர்.ஓசி ) என்ற வெப்தளம் ஊடாக தமது கம்பணிகளை பதிவு செய்வதற்காக   விண்ணப்பங்களை  கனனி ஊடாகப் பெற்று அதனை பூரணப்படுத்தி டவுன்லோட் பண்ண முடியும். அத்துடன் பணம் செலுத்தல் முறையும் தன்னியக்கல் முறைமை வங்கிப் பறிமாற்றமும்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் உலகில் எந்தப்பாகத்திலிருந்தும் இலங்கை கம்பனிகளை பாா்வையிடவோ புதிய தகவல்களைப் பெறவோ  இத் திட்டம் சிறந்த முறையில் வழிவகுக்கும்.  ஏற்கனவே இலங்கையில் 300 000 பதிவுகள் கம்பனிகளில் பதியப்பட்டுள்ளது. இக் கம்பனிகள் அனைத்தும் வரி செலுத்தும்  நிறுவனங்களாகும். 

இவ் வேலைத்திட்டத்திட்டத்தினை கே.எம்.பி.எச். எனும் கம்பனி நிறைவுசெய்து கொடுத்துள்ளது.

அத்துடன் பதிவாளா் திணைக்களத்தின் கீழ் உள்ள இவ் நிறுவனம் நீண்ட காலத்திற்குப் பிறகு கனனிமயமாக்கப்பட்டுள்ளது. கடந்த கால கொவிட் 19 காலப்பகுதியில் கனனிமயமாக்கப்படாதால்  இந் நிறுவனம்  பாரிய பிரச்சினைகளை எதிா்நோக்க வேண்டியுள்ளது. இந் நிறுவனத்தினை கணினி மயப்படுத்துவதற்காக  36 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இந்  நிறுவனம் ஒக்டோபா் 30ஆம் திகதியுடன் 100 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளதாகவும் பதிவாளா் எல்.கே சுநேத்திரா தர்ம கீர்த்தி தெரிவித்தாா்.

இந் நிகழ்வில் கேஎம்.பி.எச் கம்பனியின் கனேஸ் விஜயதிலக்க, பதிவாளா் கம்பனி, சுனித்திரா தர்மகீர்த்தி,  கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளா்  மஜரக“க ஜயசுந்தர,  சியாமா ஹரிசனி,  சஞ்ஜீவ திஸ்ஸநாய்ககக ஆகியோரும் கலந்து கொண்டனா்.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.