நாட்டின் வளிமண்டலத்தில் தூசுத் துகள்களின் செறிவு அதிகரிப்பு

இலங்கையின் வளிமண்டலத்தில் உள்ள தூசுத் துகள்களின் செறிவு தற்போது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட அதிக அளவை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய நகரங்களில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக அந்த நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு நவம்பர் முதல்  எதிர்வரும் மார்ச் வரை இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து, நாட்டின் வளிமண்டலத்தை பாதிக்கும் என்றார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.