அரசு அலுவலகங்களுக்கு எளிதான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலகங்கள் தவிர, ஏனைய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது என அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு வசதியான ஆடைகளை அணிவது குறித்து கல்வி அமைச்சு தனது முடிவை அறிவிக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளுக்கு வழமைக்கு மாறான ஆடைகளில் சென்று , சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்ட ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என பதில் ஊடக அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.