காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கைக்கு உதவ பொதுநலவாய மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) முன்வந்துள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

எகிப்தில் இடம்பெற்ற COP 27 கூட்டத்தின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் கொரியா உட்பட பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், எதிர்வரும் காலங்களில் அவர்களுடன் கலந்துரையாட அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.