உணவு பொருட்களை தேவையானவர்கள்எடுத்துச் செல்லுங்கள் இயலுமானவர்கள் வைத்துச் செல்லுங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் உணவு பொருட்களை தேவையானவர்கள் எடுத்துச் செல்லுங்கள் இயலுமானவர்கள் வைத்துச் செல்லுங்கள் என்ற திட்டத்தில் ரெசிலியன்ஸ் அமைப்பினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகணத்தில் இடம் பெற்று வருகின்றது.

தேவையானவர்கள் எடுத்துச் செல்லுங்கள் இயலுமானவர்கள் வைத்துச் செல்லுங்கள் என்ற திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று, ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் உணவுகள் வைப்பதற்கான பெட்டிகள் உணவுகளுடன் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியலயம், செம்மண்ஓடை அல் ஹம்ரா வித்தியாலயம், ஓட்டமாவடி பஸ் தரிப்பு நிலையம் என்பற்றில் உணவுகள் வைக்கப்பட்ட பெட்டிகள் வைக்கப்பட்டன.

இதில் பாடசாலைகளில் வைக்கப்பட்ட பெட்டிகளில் பிஸ்கட், பால் பக்கட்டுகள் வைக்கப்பட்டதுடன் பொது இடங்களில் வைக்கப்பட்ட பெட்டியில் பிஸ்கள், பருப்பு, கோதுமை மா, சம போச போன்ற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.

இப் பொருட்கள் தேவையான எவரும் தங்களது தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்வதுடன் வசதி படைத்தவர்கள் தங்களாலான பொருட்களை இதில் வைத்துச் செல்லாம் என்று இத்திட்டத்தின் இணைப்பாளர் எம்.எச்.எம்.அம்ராஸ் அலி தெரிவித்தார்.

இத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை, அம்பாரை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தவதற்கு ரெசிலியன்ஸ் அமைப்பின் பணிப்பாளர் டாக்டர் நெவில் விஜய சேகரவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இத்திட்டத்தின் இணைப்பாளர் எம்.எச்.எம்.அம்ராஸ் அலி தெரிவித்தார்.

இந் நிகழ்வுகளில் பிரதேச இளைஞர் சேவை மன்ற அதிகாரி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதி நிதிகள், வைத்தியசாலை நிருவாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.