இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் இலங்கைக்கான  கியூபா நாட்டின்  தூதுவர் மதிப்பிற்குரிய  Andres Marcelo Gonzalez Garrido  அவர்களை அண்மையில் கியூபா தூதரகத்தில் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் ; கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள வெளிவிவகார மற்றும் ராஜதந்திர உறவுகளின் நிலைமை தொடர்பாகவும்

இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் அதில் பிரதானமாக இளைஞர்கள் முகம் கொடுக்கும் சவால்கள் மேலும் இளைஞர்களுக்கான வெளிவிவகார வாய்ப்புகள் உட்பட துறைசார் வகிபாகங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

மேலும் இக்கலந்துரையாடலின் போது கியூபா நாட்டின்  தூதுவர் மதிப்பிற்குரிய Andres Marcelo Gonzalez Garrido

அவர்கள் குறிப்பிடுகையில் ;

கியூபா நாட்டின் பாராளுமன்றத்தில் பெண்களுடைய பிரதிநிதித்துவம் உலகளாவிய ரீதியில் அதிகூடியளவிலான பெண்கள் (50%) பாராளுமன்றதிற்கு உள்வாங்கப்படுகின்ற நாடுகளுள் இரண்டாவது நாடாக கியூபா திகழ்கிறது என தெரிவித்தார்.

மேலும், கியூபா மருத்துவத்துறை தொடர்பான கற்கை நெறிக்கு மிகவும் பிரபல்யமான நாடாகும் எனவும் இலங்கையில் உள்ள இளைஞர்களின் மருத்துவத்துறை தொடர்பான  கற்கை நெறியை  புலமைப்பரிசில் மூலமாக கியூபாவிற்கு சென்று பூரணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அன்று போலவே இன்றும் நடைமுறையில் இருக்கின்றன எனவும் அவர் எமக்கு நினைவுபடுத்தினார்.

இக்கலந்துரையாடலின் பின்னர், இரு நாடுகளினதும் உறவு இளைஞர்களின் ஊடாகவும் மேலும் வலுப்படுத்த சிறந்த நடவடிக்கைகள் எதிர்காலங்களில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டனர்.

Ahmath Sadique

Deputy Minister of External Affairs and Diplomatic Relations Sri Lanka Youth Parliament🇱🇰



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.