பாடசாலை விடுமுறை காலத்தை குறைக்க அதிரடி தீர்மானம்.

 2023 ஆம் ஆண்டில், பாடசாலைகளுக்கான விடுமுறை காலத்தை குறைத்து, கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைக்கான காலத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இரண்டாம் தவணை டிசம்பர் 2 ஆம் திகதி முடிவடையும் என்றும் மூன்றாம் தவணை டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, டிசம்பர் 22 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும், ஜனவரி 10 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

 இந்த ஆண்டில், முதலில் திட்டமிட்டபடி எங்கள் பாடத்திட்டத்தை நிறைவு செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க உயர்தரப் பரீட்சைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென்பதனால் உயர்தரப் பரீட்சையை ஜனவரி 23ஆம் திகதி வரை ஒத்திவைக்க நேரிட்டது.

 2023 ஆம் ஆண்டில், விடுமுறை காலத்தை குறைத்து, பாடசாலை காலத்தை அதிகரிக்கவும், அந்த ஆண்டில் பாடத்திட்டத்தை முடிக்க முயற்சிக்கிறோம். அது நடந்தால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கமான மற்றும் உயர்நிலை பரீட்சைகளை எங்களால் தொடர முடியும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.