தசுன் ஷானகவின் முக்கிய அறிவிப்பு

 இன்றைய போட்டியில் தினேஷ் சந்திமால் இணைவதற்காக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் நல்ல மனநிலையில் இருப்பதாகவும் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

 ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2023 ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடியாக தகுதி பெற வேண்டுமானால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும்.

 இந்த ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்தது.

 16 பேர் கொண்ட அணியில் துனித் வெல்லாலகே மற்றும் தனஞ்சய லக்ஷன் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.