நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இளைஞர்கள் பெரியவர்கள் என பலரும் வெளிநாட்டை நோக்கி படையெடுக்கின்றனர். நாட்டில் தொழில் செய்தவர்கள் கூட நோப்பே போட்டுவிட்டு வெளிநாட்டுக்கு புறப்படுகின்றனர். ஏஜென்சி ஊடாக அல்லது வேறுவழியில் வெளிநாட்டில் ஒரு தொழில் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் பிறீ விசாவில் வந்து தொழில் தேடுகின்றவர்களே இன்று அதிகம்.

இவ்வாறு கட்டார் நோக்கி பிறீ விசாவில் வருகின்றவர்களை மூன்று வகையினராக பாக்கலாம்.

1. சிறந்த கல்விச் சான்றிதழோடு வருகின்றவர் 

--------------------------------

கேள்வி நிரம்பலும் நல்ல தொழில் வாய்ப்பும் இருக்கின்ற துறையில் சிறந்த தகைமையோடு வருகின்றவர்கள். அதாவது construction, Accounting, IT போன்ற துறைகள்ள படிச்சி குறஞ்சது டிக்றி அல்லது அதற்கு ஈக்குவளாக அல்லது அதற்கு மேல் தகைமையோடு வருகின்றவர்களை குறிப்பிடலாம். உதாரணமாக இன்ஜினியர், சிவில் இன்ஜினியர், அக்கவுண்டன், சொப்ட்வெயார் இன்ஜினியர், கிறபிக் டிசைனர் இது போன்றவர்கள்.

கட்டாரைப் பொறுத்தமட்டில் இப்படித் தகைமையோடு பிறீ விசாவில் வருகின்றவர்கள் குறிப்பிட்ட சிறிது காலத்துக்குள்ளேயே தனது பீல்டுக்கு பொருத்தமான ஏதோ ஒரு தொழிலை பெற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் கட்டார்லயும் அதற்கான தொழில்வாய்ப்பும் இருக்கின்ற அதே நேரம் ஏனையோருடன் போட்டி போட்டு தொழிலைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு தகைமையும் இருக்கின்றது. இதனால் அவர்கள் சிறிது காலத்திலேயே தொழிலைப் பெற்றுக்கொள்கின்றனர்.

2. எவ்வித கல்விசார் சான்றிதழும் இல்லாதவர்கள் 

-----------------------------

இந்த வகையினரில் பாடசாலைக் கல்வியை மாத்திரம் முடித்தவர்களைக் குறிப்பிடலாம். நாட்டில் தொழில் பிரச்சினை, வருமான குறைவு, வீட்டில் கஷ்டம், குடும்ப பொறுப்பு எனவே நாட்டுல இரிக்கிரத விட வெளிநாடு போய் ஏதாவது ஒரு தொழிலை செய்வம் என்ற மநோ நிலையில் வருப்பவர்கள். இவ்வாறானவர்கள் பொதுவாக பிறீ விசாவில் வருவது குறைவு. ஏஜென்சி ஊடாக அல்லது யாரும் தெரிஞ்ச ஒருத்தர் வீசா அனுப்பி அதனூடாக வருவார்கள்.

இவர்களிடம் தொழில்சார் கல்வித் தகைமை எதுவும் இல்ல எங்குறதால இவங்களுக்கு பெரிய தொழில்கள் மீதான ஆர்வமோ கொழுத்த சம்பள எதிர்பார்ப்போ இருக்காது இதானால இவங்க பிறீ விசால வந்தால் கூட அவசரமாக வேலைய தேடிக்கொள்வாங்க. இவங்களுக்கான தொழில்வாய்ப்பும் அதிகம். 

1300 – 2000 றியால் உள்ளுக்கு சேல்ஸ் மேன், ஸ்டோர் கீப்பர், செக்கியுறிடி, ஹொட்டல் போன்ற நோர்மல் ஜொப்ல ஜொயின்ட்டாகி வேலை செய்வாங்க. சம்பளம் கொறவு எங்குறதாலதான் இவங்க ஆறு ஏழு லட்சம் செலவளிச்சி பிறீ விசால வராம இருப்பது. 

3. மேலே குறிப்பிட்ட இருவகையினருக்கும் இடைப்பட்டோர்

----------------------------

பெரிய ஜொப்கள்ள ஜொயின்ட்டாகும் அளவுக்கு பெரியளவு குவாளிபிகேஷன் இருக்காது. அதே நேரம் சின்ன சம்பளத்திற்கு போகும் அளவுக்கு குவாளிபிகேஷன் இல்லனும் இருக்காது இரண்டும் மத்தியில இருப்பவர்கள். உதாரணமாக சொல்லப் போனா கலைத் துறையில ஏதோவொரு பட்டம் பெற்றவர்கள், அரபுக் கல்லூரியில பட்டம் பெற்றவர்கள், டிப்ளோமா, NVQ, QS என்டு கோர்ஸ் போனவர்கள் என பலரைக் குறிப்பிடலாம்.

இவ்வாறானவர்கள்தான் அதிகம் பிறீ விசாவில் வருகின்றனர். இவர்களது தகைமைக்கேற்ற ஜொப் இருந்தாலும் அதனைத் தேடி எடுப்பதில் கால தாமதத்தையும் சில கஷ்டங்களையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதற்கு பின்வரும் சில விடையங்களும் காரணமாக அமைகின்றது.

1. தொழில் வாய்ப்புக்கள் குறைந்த பீல்ட்ல கல்வித் தமைமை

2. அதிக தொழில் வாய்ப்புக்கள் இருந்தாலும் அதற்குப் போதுமான கல்வித் தமைமை இல்லாமை

3. பெரிய செலவில் பிறீ விசாவில் வெளிநாடு வருவதால் குறைந்த சம்பள தொழிலுக்கு செல்ல விருப்பமின்மை.

4. நோர்மல் ஜொப்புக்கு போவதிலுள்ள தாழ்வு மனப்பான்மை.

6. வெளிநாட்டு அனுபவம் இன்மை.

7.  தேவையான முயற்சிகளைச் செய்யாது இயலுமான முயற்சியை மாத்திரம் மேற்கொள்ளல்.

8. FIFA ஐ மையப்படுத்தி கட்டாரில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள்

இப்புடி பல காரணங்களால் இவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகின்றது. இன்று பலர் பல மாதங்களாக தொழில் தேடி அலைகின்றனர். இன்னும் சிலர் ஒரு வருடத்திற்கு மேல் தொழில் தேடுகின்றனர். இன்னும் சிலர் செய்த தொழிலிருந்து இடைவிலக்கப்பட்டு தொழில் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

கட்டாருடைய தற்போதைய நிலைமையைப் பொறுத்தமட்டில் கட்டார் அரசாங்கம் FIFA ஐ மையப்படுத்தி சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் கட்டாருக்கு வருவதில் எவ்வித சிக்கலை ஏற்படுத்தாவிட்டாலும் நிலையான ஒரு தொழிலைத் தேடிக் கொள்வதில் கடந்த காலங்களை விட இன்று பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 

அதே நேரம் கடந்த காலங்களை விட இன்று பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது. FIFA விற்கு பிந்திய கட்டார் எப்புடி இருக்கும் என்பதில் பல கருத்துக்கள் இருக்கின்றன. 

தொழில் வாய்ப்புக்கள் விலைவாசிகள் என்பன எப்படி இருக்கும்....? FIFA  வை மையப்படுத்தி கட்டார் செலவு செய்த பணத்தை மீட்டிக்கொள்ளுமா...? இதற்காக கட்டப்பட்டுள்ள ஸ்டேடியத்தை இதற்குப் பின்னர் எப்படி கட்டார் பராமரிக்கப் போகின்றது...? FIFA யிற்குப் பின்னர் கட்டார் வீழ்ந்திடுமா...? இப்படி பல கேள்விகள் இருக்கின்றன. 

இவ்வளவு பிளான் பண்ணின கட்டார் இதையெல்லாம் பிளான் பண்ணாமல் இருக்குமா என்ற பதிலும் இல்லாமல் இல்லை. இவ்வாறான கேள்விகள் எழுவதற்கான காரணம் கடந்த காலங்களில் FIFA நடாத்திய நாடுகளின் கசப்பான அனுபவங்களே.

கட்டாரின் தற்போதைய நிலைமைய கருத்திற்கொண்டு பிறீ விசாவில் வருபவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய சில விடையங்களை குறிப்பிடுகின்றேன்.

1. பிறீ விசாவில் வர திட்டமிட்டுள்ளவர்கள் FIFA முடிந்ததன் பின்னர் வருவது சிறந்தது.

2. Construction பீல்ட்ல ஜொப் தேடுறவங்க கட்டாருக்கு வராமல் சஊதிக்கு செல்வது நல்லம். தற்போது அங்கு புதிய Project  ஆரம்பித்துள்ளதால் தொழில் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. பலர் சென்று மிகக் குறுகிய காலத்திற்குள் தொழிலும் பெற்றுள்ளார்கள். வாழ்க்கைச் செலவும் குறைவு. ஒரே ஒரு சிக்கல்தான் பிறீ விசாவில் போவதற்கு சுமார் 10 லட்சத்துக்கு மேல் தேவைப்படும்.

3. பிறீ விசாவில் கட்டார் வர இருப்பவர்கள் நாட்டில் இருக்கும் போதே தொழிலுக்கான சில முன்னேற்பாடுகளை செய்துவிட்டு வருவது நல்லம். ஒன்லைன் மூலமோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ உங்கட சீவிய அனுப்பி சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வாருங்கள்.

4. கட்டாரில் உங்களுக்கு உதவி செய்வார்கள் என நீங்க கருதும் நபர்களோடு நாட்டில் இருக்கும் போதே தொடர்பை மேம்படுத்திக்கொள்ளுங்கள். நாட்டிலிருந்து வரும் போது அவர்களது வீட்டிலிருந்து ஏதும் தந்தா அதனைக் கொண்டு வந்து கொடுங்கள். அதற்காக அவர்களை அதிகம் தொந்தரவும் செய்யாதீர்கள்.

5. பிறீ விசாவில் வந்து ஓரிரு மாதங்களில் தொழில் பெற்றுக்கொள்ள முடியாது என்று கருதினால் உடனே ஐடியை எடுத்துக்கொள்ளுங்கள். ஐடியிலிருந்து கொம்பனி மாற்றம் செய்வது இலகு எங்குறதால இன்று நிறைய இன்டர்விவ்ல கட்டார் ஐடி இருக்கானு கேக்குறாங்க.

6. பிறீ விசாவில் வருபவர்கள் தற்காலிகமாக ஏதோ ஒரு தொழிலை செய்துகொண்டு நிரந்தமான ஒரு தொழிலுக்கான முயற்சியை மேற்கொள்ள முடியுமாக இருந்தால் அதனைச் செய்யுங்கள். அது மிகச் சிறந்த வழி. அது உங்கட பல பிரச்சினைகளைத் தீர்க்கும். தற்பொழுது கட்டாரில் FIFA யிற்காக தற்காலிகமாக ஆட்கள் சேர்கின்றார்கள் தேவையானவர்கள் அதில் ஜொயின்ட் பண்ணலாம்.

7. உங்களுக்கான தொழில் உங்கள் முயற்சியிலேயே தங்கியிருக்கின்றது. வேறு யாரை நம்பியும் வேலை இல்லை என்பதைக் கருத்திற்கொண்டு எல்லா வகையான முயற்சிகளிலும் ஈடுபடுங்கள்.

8.கட்டாரில் gகல்ப் ட்றைவிங் லைசன் மற்றும் gகல்ப் தொழில் அனுவம் இது இரண்டும் டிக்றி சான்றிதழைப் போல் பார்க்கப்படுகின்ற இரு விடையங்கள். இது இரண்டுக்கும் இங்கு முன்னுரிமை அதிகம் என்பதையும் கருத்திற்கொள்ளவும்.

9. என்னதான் முயற்சி செய்தாலும் இறைவனின் நாட்டம் இல்லாமல் எதுவும் நடந்து விடாது. அவன் நாடினால் நீங்கள் வந்து அடுத்த நாளே தொழில் கிடைத்தும் விடலாம் எனவே மேலே சொன்ன அத்தனை முயற்சிகளுக்கும் முன்னர் இறைவனிடம் பிராத்தியுங்கள், நோன்பு நோற்று தஹஜ்ஜுத் தொழுது துஆச் செய்யுங்கள். அதற்காக தொழில் கிடைக்கும் வரை மட்டும்தான் தொழுது, நோன்பு பிடித்து, அது இது செய்வேன் என்று நீயத்து வைத்து இறைவனுக்கே லஞ்சம் கொடுக்கும் வேலையைச் செய்யாதீர்கள். 

மேலே எனது அனுபவத்திற்கு எட்டிய ஒரு சில விடையங்களைக் குடிப்பிட்டுள்ளேன் இதை விட பல அனுபவங்களைப் பரிமாறக்கூடியவர்களும் இருப்பார்கள் அவர்களது ஆலோசனைகளையும் பெற்று உங்கள் தொழில் முயற்சியை ஆரம்பியுங்கள். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற்று எதிர்காலம் சிறந்ததாக அமைய என்றும் இறைவன் அருள் புரிவானான!

முந்திய பதிவுகள் :

பதிவு - 1 வேர்க் விசா பிறீ விசா

https://m.facebook.com/story.php?story_fbid=2654214338045993&id=100003723595499

பதிவு - 2

https://m.facebook.com/story.php?story_fbid=2656694224464671&id=100003723595499

பதிவு - 3

https://m.facebook.com/story.php?story_fbid=2660068174127276&id=100003723595499

பதிவு - 4

https://m.facebook.com/story.php?story_fbid=2700268823440544&id=100003723595499

Sajeer Muhaideen

01/11/2022

#QTதகவல்_7

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.