05 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

 இன்று 14-12-2022 ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

அதன் அடிப்படையில்

கோதுவை மா கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 250 ரூபாவாகும்.

ரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

மேலும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும்

டின் மீனின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்  இதன் புதிய விலை 490 ரூபாயாகும்.

ஒரு கிலோ வௌ்ளைப்பூண்டின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 190 ரூபாவாகும்.

இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அடுத்து வரும் வாரத்தில் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.